தில்லுமுல்லு திமுகவின் மஞ்சள் நிற பேண்டு... நூதன முறையில் பணப்பட்டுவாடா

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த கால தேர்தல்களின் போது பொதுமக்களுக்கு ஓட்டுக்காக ஓவ்வொரு முறையும் வீடு வீடாக சென்று பணம் கொடுப்பது, டோக்கன் விநியோகிப்பது, பொருள்களாக தருவது இப்படி பல்வேறு மோசடிகளை அரங்கேற்றிய தில்லு முல்லு கட்சி ஒன்று தற்போது நேரடியாக எந்த அச்சமும் இல்லாமல் பண விநியோகத்தில் நேரடியாக இறங்கியுள்ளது. அப்படி அந்த கட்சி செய்த பண பேண்டு குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி பங்கேற்ற பிரச்சார கூட்டம் அது. என்ன டா இது இவ்வளவு கூட்டமா என திகைப்புடன் பார்த்த அப்பகுதி மக்களுக்கு ஒரே ஷாக். எப்புட்றா எப்புட்றா என்பது போல் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கையில் மின்னியது மஞ்சள் நிற பேண்டு.

என்ன டா இது. எதோ தப்பா தெரியுதே என கேமரா கண்களை திருப்பி உற்று பார்க்க வைத்தால் அங்கு பேசிய குரல்கள் அது தில்லு முல்லுதான் என வெளிப்படையாக ஊர்ஜிதம் செய்தது.

சரி விஷயத்திற்கு வருவோம். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கனிமொழி பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 11:30 மணி வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் கடும் வெயிலில் காத்துக் கிடந்தனர்.

ஆனாலும் இப்படி பொதுமக்கள் பொருமையாக காத்திருக்க அவசியம் என்ன என விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பிரச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு திமுகவினர் நூதன முறையில் கையில் எண்களுடன் கூடிய உதயசூரியன் சின்னம் அச்சிடப்பட்ட பேண்டுகளை கைகளில் கட்டி வைத்துள்ளனர். இதனை கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வரவழைக்கப்பட்ட ஆண் பெண் என அனைவரும் கைகளிலும் கட்டி கொண்டு அங்கும் இங்குமாக சுத்தி கொண்டிருந்தனர்.

பகிரங்கமாக வெளியே தெரியும் அளவிற்கு இப்படி சந்தேகம் எழுப்பக்ககூடிய கைபேண்டை பார்த்து,  பெயரளவிற்கு கூட ஒரு கேள்வி கூட அதிகாரிகள் கேட்காமல் கண்டும் காணாமல் நின்றது நடுநிலையான மக்களுக்கு மேலும் பல்வேறு சந்தேகங்களை உண்டாக்கியுள்ளது.

ஊர் அறிய தெரிந்தாலும் என்ன எந்த வழியிலாவது பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற வேண்டும் என்பதையே ஒரே கொள்கையாக வைத்து செயல்பட்டு வருகிறது இந்த தில்லுமுல்லு திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது.

Night
Day