திருவாரூரில் 13,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் கனமழை காரணமாக விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேல் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. நாச்சிகுளம், உதய மார்த்தாண்டம், மாங்குடி, பள்ளியமேடு, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழைநீர் வடிய மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

varient
Night
Day