திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலய கொடியேற்ற உற்சவ விழா - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலய கொடியேற்ற உற்சவ விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் கோட்டூர் பகுதியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியங்கள் இசைத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் பகுதியில் கழகத் தொண்டர்கள் திரண்டு வந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். மடப்புரம் கிராம காளியம்மன் கோயில் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திரளான பெண்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகத்துடன் வரவேற்று கை குலுக்கி மகிழ்ந்தனர். பின்னர் அங்கு இருந்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு சென்ற கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள் பூங்கொத்துகொடுத்தும், ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் எழுச்சி முழக்கங்களை எழுப்பி புரட்சித்தாய் சின்னம்மாவை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கழக நிர்வாகிகள் நடராஜர் சிலையை புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நினைவுப்பரிசாக வழங்கி மகிழ்ந்தனர்.

இதனைதொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில், செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திவாகரன் உபயமாக நடைபெற்ற சித்திரைப் கொடியேற்ற பெருவிழாவில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 

தொடர்ந்து ஆலயத்தில் உள்ள ஸ்ரீ தீர்த்த விடங்க விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சுவாமி சன்னதி, ஸ்ரீ கஜசம்கார மூர்த்தி சன்னதி, மூலவர் ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் சன்னதி, ஸ்ரீ தியாகராஜர் சன்னதி, ஸ்ரீபெரியநாயகி அம்மன் சன்னதி முதலான சன்னதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா மனமுருகி வழிபாடு நடத்தினார். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஒவ்வொரு சன்னதியின் சிறப்பையும் ஆலய சிவாச்சாரியார் எடுத்துரைத்து தீபாராதனை காண்பித்தார்.

இதனையடுத்து ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் முடிந்து புரட்சித்தாய் சின்னம்மா கோயிலுக்கு வெளியே வந்தபோது அங்கு திரண்டு இருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் புரட்சித்தாய் சின்னம்மா உடன் அங்குகூடியிருந்த திரளான கழக தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ள உலக ரட்சகன் சாய் பாபா ஆலயத்திற்கு சென்ற கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மங்கல வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், புரட்சித்தாய் சின்னம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவர்களிடம் புரட்சித்தாய் சின்னம்மா நலம் விசாரித்தார். 

தொடர்ந்து சாய்பாபா சன்னதிக்கு சென்று புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு நடத்தினார். அப்போது அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்தி சாய் பாபாவிற்கு தீபாராதனை காண்பித்து புரட்சித்தாய் சின்னம்மாவிடம் அருட் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் சாய்பாபா சன்னதி பிரகாரத்தை சுற்றி வந்து புரட்சித்தாய் சின்னம்மா வழிபட்டார்.


Night
Day