திருச்சி : மேம்பாலத்தில் திடீரென பின்னோக்கி வந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் பால்பண்ணை அருகே திடீரென பின்னோக்கி வந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, திடீரென பின்னோக்கி வந்த லாரி மீது மோதியது. இதில், பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தின் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

Night
Day