திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயற்சி - தள்ளுமுள்ளு

எழுத்தின் அளவு: அ+ அ-

பெருந்தலைவர் காமராஜரை பற்றி இழிவுபடுத்தி பேசிய திமுக எம்பி திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

கடந்த சில நாட்களுக்கு முன் பெருந்தலைவர் காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தமிழர் தேசம் கட்சியின் சார்பில் திருச்சி சிவா வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Night
Day