திமுக அரசைக் கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 வன்னியர்களுக்கு துரோகம் இழைத்துவரும் விளம்பர திமுகவிற்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் பாமக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், விளம்பர திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரத்து 208 நாட்களாகியும், இடஒதுக்கீடு வழங்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மறுத்து வருவதாக குற்றம் சாட்டினார். வன்னியர்களின் எதிரியான ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு ஓட்டு கூட போட கூடாது என்றும், வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டார். திமுகவில் உள்ள வன்னியர் இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராவது இடஒதுக்கீடு குறித்து ஸ்டாலினிடம் வலியுறுத்த தைரியம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Night
Day