திண்டுக்கல்: வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் நிலங்களில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டு அதிகளவிலான புகைமூட்டம் வெளியேறியது. கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் பெருமாள் மலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள வருவாய் நிலங்களில் தீவிபத்து ஏற்பட்டது. வனப்பகுதியில் தீ தடுப்பு எல்லைகள் அமைக்காததே விபத்திற்கு காரணம் என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், வனத்துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

varient
Night
Day