தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தார்சாலை போட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 வருடங்களாக தார்சாலை இல்லாமல் தவிக்கும் இம்மக்கள், அவசர நேரத்தில் மருத்துவமனைக்குக்கூட செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார், பள்ளி மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...