தமிழ்நாடு கள்ளர் மகா சங்க தலைவரின் தாயார் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பேரையூரை சேர்ந்த, தமிழ்நாடு கள்ளர் மகா சங்க தலைவர் திரு.பாண்டியன் அவர்களின் தாயார் S.வைரத்தம்மாள் அவர்களின் மறைவுக்‍கு அஇஅதிமுக பொதுச்​செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பேரையூரை சேர்ந்த, தமிழ்நாடு கள்ளர் மகா சங்க தலைவர் திரு.பாண்டியன் அவர்களின் தாயார் S.வைரத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது தாயை இழந்து வாடும் திரு.பாண்டியன் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக 
சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

varient
Night
Day