தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சென்ட்ரலில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

விளம்பர திமுக அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்தை கண்டும் காணாமல் திமுக அரசு அலட்சிய போக்குடன் நடந்து வருகிறது. இதனைக் கண்டித்து சென்னை சென்ட்ரலில் போக்குவரத்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 15-வது ஊதிய ஒப்பந்த அரியர்ஸ், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் குவிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும்-போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 53 நாட்களாக போராடி வருவதாகவும், அதற்கு இந்த விடியா அரசு செவிமடுக்கவில்லை என்றும் ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். தங்களின் கோரிக்கைகளை விளம்பர திமுக அரசு நிறைவேற்றாமல் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனிடையே சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி போக்குவரத்து ஊழியர்கள் பேரணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் நலச்சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலுயுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என்று குற்றம்சாட்டினார். எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் காவல்துறையினரை வைத்து ஆங்காங்கே கைது செய்து அடக்குமுறையில் ஈடுபடுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 


Night
Day