தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அதன்தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், ஓரிரு பகுதிகளில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.

Night
Day