தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் இன்றுமுதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதல் கட்டமாக வானகரம், செங்கல்பட்டு பரனூா், திண்டிவனம், ஆத்தூா், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூா் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

varient
Night
Day