தமிழகத்தில் ரமலான் சிறப்பு தொழுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அந்தவகையில், மதுரை மாவட்டம் அரசரடி பகுதியில் உள்ள திடலில் தமிழ்நாடு முஸ்லின் முன்னேற்ற கழக அமைப்பின் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. இதில், பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சுன்னத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். புளியங்குடி அரபிக் கல்லூரி திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவர்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.




Night
Day