நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் அதிகாலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மும்பையில் உள்ள மஹிம் மசூதியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்புத்தொழுகை நடத்தினர். 30 நாள் நோன்பு நிறைவடைந்து இன்று ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமிய மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீப் மசூதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் 
அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி காலையிலேயே பள்ளி வாசல்களுக்கு சென்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜமால் மசூதியில் அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.





Night
Day