சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று தங்கம் சவரனுக்கு 160 உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, 88 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 88 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

varient
Night
Day