தமிழகத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுத்திட, திமுக தலைமையிலான விளம்பர அரசு  அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். திமுகவினர்,  மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், தங்கள் கட்சியை எப்படி வளர்ப்பது, அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது, என்று வெறும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர், மஹாராஷ்டிராவில் நாக்பூர், ஜார்கண்டில் ராஞ்சி ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய், 'H5N1' பரவி வருவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்துள்ளார். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்- மேலும், மேற்கு வங்காளத்தில் 4 வயது குழந்தை,  புதிய வகை H9N2 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருவது மிகவும் கவலையளிக்கின்றது - இந்த வைரஸ் அதிக வீரியமில்லாததாக அறியப்பட்டாலும், வைரஸ்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுசீரமைக்கும் திறன் கொண்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன- மேலும், தற்போது மனிதர்களையும் தாக்கும் நிலையில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது- தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த தேவையான அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ளவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் இது போன்ற சுகாதார நடவடிக்கைகள் சிறப்பான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டன- பறவை காய்ச்சல் நோய் கோழிகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன- கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது - கோழிப்பண்ணைகளுக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கப்பட்டன- மாநிலத்தின் எல்லைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன -  நம் மாநிலத்திற்கு உள்ளே வந்து கோழிகள் ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் முறையாக சோதனையிடப்பட்டன-  வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளித்து அனுமதிக்கப்பட்டன- இதுபோன்று இன்னும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொற்று ஏற்படுவதற்கு முன்கூட்டியே எடுக்கப்பட்டன- திமுக தலைமையிலான அரசு இதுபோன்று எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுகவினர் மக்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், தங்கள் கட்சியை எப்படி வளர்ப்பது, அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று வெறும் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படவேண்டும்-தமிழகத்தில் சுகாதார சீர்கேடுகள் ஆகாமல் தடுத்திட, புரட்சித்தலைவி அம்மாவை போன்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுத்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day