தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 880 ரூபாய் அதிகரித்து சவரன் 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு ஒரே நாளில் 880 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 69 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி  விலை மாற்றமின்றி கிராமுக்கு 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Night
Day