டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டது.

குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் திடீரென பலத்த வெடிசத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது,  ட்ரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Night
Day