ஜெயா ப்ளஸ் எதிரொலி - அமைச்சர் நேரு ஆக்கிரமித்த இடத்தில் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி தென்னூரில் அமைச்சர் நேரு ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வக்ஃபு வாரிய அதிகாரிகள், நிலம் அளவீடு செய்யும் வரையில் பணிகளை தொடங்கக் கூடாது என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் மீர்ஹசனுல்லா ஷா தர்காவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம், அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் மாண்புமிகு அம்மா மீட்டு கொடுத்தார். தற்போது மீண்டும் அந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததாக தர்கா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வக்ஃபு வாரிய அதிகாரிகள் அந்த இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நாளை மறுநாள் அரசு நிலஅளவையர் மூலம் அளவீடு செய்யவுள்ளதாகவும் அதுவரையில் ஏற்கனவே அளவீடு செய்து குறிக்கப்பட்டுள்ள இடங்களில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

varient
Night
Day