ஜெயா பிளஸ் செய்தி எதிரொலி - கோவை ஆழியார் அணைக்கட்டு பகுதியில் வேலி அமைக்கும் பணி தீவிரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா பிளஸ் செய்தியின் எதிரொலியாக ஆனைமலை அடுத்த ஆழியார் பள்ளிவளங்கால் அணைக்கட்டு பகுதியில் உயிரிழப்புகளை தடுக்க வேலி அமைப்பட்டு வருகிறது. 

ஆழியார் பள்ளி வளங்காள் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித்துறையால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையை மீறியும் பலர் குளித்து உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுப்பு வேலி அமைத்து ஆற்றுக்குள் இறங்குவதை தடுக்க வேண்டும் என ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் செய்தி  வெளியாகியிருந்தது. இதனையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது அணைக்கட்டுப்பகுதியில் வேலி அமைத்து வருகின்றனர். 

Night
Day