எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜெயா தொலைக்காட்சியின் 27-வது ஆண்டு விழா சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதல்படியும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் ஆலோசனைப்படியும் கடந்த 1999ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அன்று முதல் மக்களுக்கு பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் உண்மையை உரக்கச் சொல்லும் செய்திகளுடன் ஒளிபரப்பாகிவரும் ஜெயா தொலைக்காட்சி வெற்றிகரமாக 26 ஆண்டுகளை நிறைவு செய்து இன்றுடன் 27-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனையொட்டி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் 27-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு.விவேக் ஜெயராமன் அவர்களுக்கு ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 27-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.