சொத்துவரி முறைகேடு - உதவி ஆணையர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 19 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு செயல்பட்டு வந்த நிலையில்,  கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் உதவி ஆணையர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 

Night
Day