சேலம்: 80 அடி ஆழ நீரற்ற கிணற்றில் தவறி விழுந்த காளை மாடு மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் அருகே 80அடி ஆழ பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ஓமலூரை அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது நாட்டுமாடு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த நிலையில், விவசாய நிலத்திற்கு அருகே உள்ள 80அடி ஆழ நீரற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்தது தெரியவந்தது. மாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது உடம்பில் காயங்களுடன் காளைமாடு கிணற்றில் கிடந்துள்ளது. இதனையடுத்து அங்குவந்த தீயணைப்பு துறையினர், நீரற்ற கிணற்றில் இறங்கி கயிறுகள் கட்டி சுமார் 2 மணிநேர போராட்டத்திற்குப்பின் காளையை உயிருடன் மீட்டனர்.

Night
Day