செப்.5 - ஆசிரியர் தினம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் உன்னத பணியினை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

ஆசிரியர்கள் தாயாக, தந்தையாக மட்டுமின்றி உற்ற நண்பர்களாக இருந்து மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கின்ற உன்னதப் பணியை சேவை மனப்பான்மையோடு தொடர்ந்து செய்து வருகிறார்கள் - எத்தனையோ ஆசிரியர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தங்களிடம் பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்விக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறார்கள் - ஆசிரியர் பணியினை ஊதியம் பெறும் வேலையாக மட்டும் கருதாமல் சேவையாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் நாம் அனைவரும் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் கல்வியை கற்பிப்பதோடு மட்டுமில்லாமல், நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் மாணவ சமுதாயத்திற்கு கற்பிக்கிறார்கள் - இதன் பயனாக நம் மாணவச் செல்வங்கள் எத்தனையோ துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் - நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நமது மாணவச் செல்வங்களின் திறமை மிகவும் போற்றப்படுகிறது - இந்த பெருமைகளுக்கெல்லாம் உண்மையான சொந்தக்காரர்கள், ஆசிரியர்கள்தான் என்பதைத் தெரிவித்து கொள்வதில் தான் மிகவும் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ சமுதாயத்தினை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் உன்னத பணியினை ஆசிரியர்கள் ஆற்றிவருகின்றனர் - "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" எனும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் தனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day