சென்னை: 12ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருமுல்லைவாயில் அருகே வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகம்மை நகரை சேர்ந்தவர் சந்தோஷ் என்பவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, பொதுத்தேர்வு முடிந்து வீட்டில் இருந்து வந்த மாணவன், வீட்டின் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி மாணவர் சந்தோஷ் பலத்த தீக்காயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டுவந்த பெற்றோர், உடனடியாக சந்தோஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீதம் தீக்காயம் அடைந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

varient
Night
Day