சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ராதாகிருஷ்ணன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை பொறுத்தவரை தென் சென்னைக்கான வாக்கு எண்ணும் பணி அண்ணா பல்கலைக் கழகத்திலும், வடசென்னைக்கான வாக்கும் எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னைக்கான வாக்கு எண்ணும் பணி லயோலா கல்லூரியிலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் உள்ள 3 மையங்களிலும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

இதனிடையே, சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். நாளை அதிகாலை நான்கரை மணி முதல் அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், மேசைகளில் பணிபுரியும் அலுவலர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி காலை 5 மணிக்கு நடைபெறும் என்று கூறினார். 


Night
Day