சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்தை கடந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 64 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இன்று ஒரு நாளில் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் விலை உயர்ந்து 64 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

varient
Night
Day