சென்னையில் அதிநவீன சாதனங்களுடன் ஆராய்ச்சி மையம் தொடங்கிய ஐஐடி மெட்ராஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்மார்ட் போன்கள், கை கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான அமோல்டு டிஸ்பிளே-க்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மையத்தை ஐஐடி மெட்ராஸ் தொடங்கியுள்ளது. 

இந்தியாவிலேயே ஸ்மார்ட்போன் அளவிலான அமோல்டு டிஸ்பிளேக்களை உருவாக்கும் திறன்கொண்ட ஒரே மையமாக திகழ்வதுடன், டிஸ்பிளே தயாரிப்புக்கான மூலதனச்செலவை குறைக்கும் வகையில் புதுமையான வடிவமைப்பு நுட்பத்திலும் செயல்படுகிறது. தேசிய உயர் சிறப்பு மையமான அமோல்டு ஆராய்ச்சி மையத்துக்கு இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டாடா சன்ஸ் ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன. இங்கு, டிஸ்பிளேக்களை மேம்படுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெறுவதுடன், அதிநவீன தூய்மை அறையுடன் புனரமைப்பு மற்றும் பொருட்களை பகுப்பாய்வு செய்யும் சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. 

Night
Day