சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு - மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைய உள்ள சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொளத்துப்பாளையத்தில் கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான  57 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற் கூடம் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 22 கிராமத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் கால்நடைகள் வளர்ப்பு முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.  எனவே சிப்காட் அமைக்க  நடவடிக்கை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்யும்வரை போராட்டம் தீவிரமடையும் என்றும்  கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Night
Day