கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மறைவுக்‍கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் குருமகாசன்னிதானம், ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல்நலக்குறைவால் சிவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

காளையார் கோவில் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் என ஆண்டுதோறும் குரு பூஜைகளை முன்னின்று செய்தவர் - புரட்சித்தலைவி அம்மா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவித்த நிகழ்வின் போது முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர் என புரட்சித்தாய்​சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதீனத்தை இழந்துவாடும் பக்தர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day