கோடநாடு எஸ்டேட்டில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை தந்த அஇ​அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு  எஸ்டேட்டிற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு தோட்டத்து தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எஸ்டேட் மேலாளர் நடராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரைத் தொடர்ந்து கோத்தகிரி முன்னாள் சேர்மன் மணி, அண்ணா தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் சகாய பாபு, முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு,  கோடநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் தேவராஜ், பேரூராட்சி கழகச் செயலாளர் சரவணன் மற்றும் வார்டு கவுன்சிலர் குமார் ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்தும், சால்வைகளை வழங்கியும் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர்.

இதனைதொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களுடன் புரட்சித்தாய் சின்னம்மா உரையாடினார். அப்போது அங்கு திரண்டு வந்த குழந்தைகளுக்கு சின்னம்மா சாக்லேட்களை வழங்கி மகிழ்ந்தார்.


Night
Day