கொடைக்கானல் - 300 அடி நீளத்திற்கு நிலம் பிளந்ததால் மக்கள் அச்சம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் 300 அடி நீளத்தில் நிலம் பிளந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கிளாவரை என்ற கிராமத்தில் கீழ்கிளாவரை பகுதிக்கு செருப்பன் ஓடை என்ற இடத்திலிருந்து தண்ணீர் வருவது வழக்கம். சில நாட்களாக தண்ணீர் வராததால் கீழ்கிளாவரை வரை பகுதியிலிருந்து சிலர் வனப் பகுதிக்குள் நடந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது கூனிபட்டி வனப்பகுதியில் 300 அடி நிலத்திற்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நில அதிர்வு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தில் உள்ளனர்.

Night
Day