குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிப்பேன்-அமீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

எந்த விசாரணைக்கும் தான் தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 
 
ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையி்ல் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் வீட்டில் என்சிபி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது உண்மை எனவும், பறிமுதல் செய்த பொருட்கள் பற்றி அதிகாரிகள் தான் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்பதை நிருபிப்பேன் என கூறினார். விரைவில் இதுதொடர்பாக பேசுவேன் என கூறிய அமீர், அமலாக்கத்துறை விசாரணையில் அழுத்தம் உள்ளதா, இல்லையா என்பதை தற்போது பேச விரும்பவில்லை என விளக்கமளித்தார்.

Night
Day