எழுத்தின் அளவு: அ+ அ- அ
குருக்கள்பட்டி பகுதியில் சாலைகள் நெடுகிலும் பிரம்மாண்ட கொடி கம்பங்களும், மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரவு நேரத்திலும் புரட்சித்தாய் சின்னம்மாவைக் காண திரளான பெண்கள் ஆர்வத்துடன் குழுமியிருந்தனர்.
திரளான பெண்கள் சாலையில் வரிசையில் நின்று, மலர் தூவி சின்னம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்கியும் சின்னம்மாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கழக நிர்வாகி கல்யாணசுந்தரம் 3 அடி நீளமுள்ள வெள்ளி வாளை சின்னம்மாவிடம் வழங்கினார்.
குருக்கள்பட்டியில் பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், மக்கள் நலனில் திமுக அரசுக்கு சிறிதளவும் அக்கறை கிடையாது என்றும் குற்றம்சாட்டினார்.