காதலர் தினம் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூக்களின் விலை 2 மடங்காக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காதலர் தினத்தையொட்டி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரோஜா பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய மனதுக்கு விருப்பமானவர்களிடம் காதலை வெளிப்படுத்தி, அன்பை பகிரும் நாளாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை காதலர் தின வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் 30 ரூபாய்க்கு விற்ற ரோஜா பூ 50 ரூபாய்க்கும், ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day