தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
கள்ளக்குறிச்சி கூட்டுறவு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை வாரசந்தையில் 21 லட்சத்து 76 ஆயிரத்துக்கு பஞ்சு கொள்முதல் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதனிடையே பருத்தி வார சந்தைக்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ ரகம் பஞ்சு குறைந்த பட்சம் 6 ஆயிரத்து 682 ரூபாய்க்கும், அதிகபட்சம் 8 ஆயிரத்து 169 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 182 விவசாயிகள் கொண்டு வந்த 751 பஞ்சு மூட்டைகள் 21 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...