கள்ளக்குறிச்சியில் அரசுப் பேருந்தை மறித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதால், பள்ளி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாண்டூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் மாணவர்கள் காத்திருக்கும் போது உளுந்தூர்பேட்டை செல்லும் எந்தப் பேருந்தும் பாண்டூர் கிராமத்தில் மாணவர்களை பள்ளி நேரத்தில் ஏற்றிச் செல்லுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல தாமதமாவதால் மனஉளைச்சலுக்கு ஆளாகுவதாக கூறி, மாணவர்கள் பேருந்தை மரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

varient
Night
Day