கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு 2026ல் ஐஐடி மெட்ராஸ் விருது

எழுத்தின் அளவு: அ+ அ-

கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு அடுத்தாண்டு சாரங் நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் விருது வழங்கப்பட இருப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 51-வது ஆண்டு சாரங் நிகழ்ச்சியில், நாட்டுப்புற கலைகளின் பரெட் நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தற்போது தேசிய நிகழ்ச்சியாக உள்ள சாரங் 100-வது ஆண்டை எட்டுவதற்குள் சர்வதேச நிகழ்ச்சியாக மாற வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு சாரங் நிகழ்ச்சியில், கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் விருது வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Night
Day