தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
கரூரில் அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் வைத்தும் கருப்பு கொடி ஏற்றியும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வடக்கு காந்தி கிராம பகுதி, வார்டு 16-ல் உள்ள ஜெ.ஜெ கார்டன் கிழக்கு உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராதது குறித்து பலமுறை ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியை கண்டித்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் பேனர் வைத்தும், கருப்பு கொடி ஏற்றியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...