எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மாறன் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 10 மீனவர்களையும் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையை முடிந்ததும் மீனவர்கள் புத்தளம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதேபோல், திருப்பாலைக்குடியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு காங்கேஷன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Night
Day