எடப்பாடி, தொட்டியம், கோபி ஆகிய தொகுதி தொண்டர்கள் கழக மூத்த தலைவர் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி வரும் கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கு கழக தொண்டர்கள் ஏராளமானோர் மழையையும் பொருட்படுத்தாமல் சாரைசாரையாக வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கழக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவருடைய கருத்துக்கு கழக தொண்டர்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தினந்தோறும் கழக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கழக தொண்டர்கள் குள்ளம்பாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன் இல்லத்துக்கு வருகை தந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அதேபோல திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழக தொண்டர்கள் ஏராளமானோர் மழையையும் பொருட்படுத்தாமல் சாரைசாரையாக வந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அப்போது கழகம் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றுபட்டால் மட்டுமே 2026-ல் வெற்றி என்றும் கழக தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

Night
Day