உனக்கெல்லாம் சால்வையா, திமுக எம்எல்ஏ முன்பு சால்வையை தூக்கி எறிந்த திமுக நிர்வாகி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாதவரம் திமுக எம்எல்ஏவை பார்த்து உனக்கெல்லாம் சால்வையா என திமுக நிர்வாகி தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

மாதவரம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சுதர்சனம். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் மாதவரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் புழல் நாராயணனுக்கும் கோஷ்டி மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. புழல் நாராயணனின் மகனுக்கு திமுக இளைஞர் அணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டிற்கு புழல் நாராயணன் தனது மகனை அழைத்து சென்று எம்.எல்.ஏவுக்கு சால்வை அணிவிக்க கூறியிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த புழல் நாராயணனின் மகன் உனக்கெல்லாம் சால்வையா என கூறி தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day