உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியுரியும் உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று திடீரென சோதனை நடத்திய சோதனையில் 5 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் மதுரை ஆனையூர்  அருகேயுள்ள உதவி கோட்ட பொறியாளர் ரங்கபாண்டியனின் வீட்டில் காலை முதல் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைககள் இருக்கிறதா என்பதை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Night
Day