தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழி இல்லாமல் வசிக்கும் முதியவர்களின் துயரத்தை போக்கும் வகையில், முதியோருக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கி வந்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.. ஆனால் விளம்பர திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகையின் தற்போதைய நிலை என்ன பார்க்கலாம் விரிவாக...
பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே கொடுத்த பெற்றோரை, அவர்களின் கடைசி காலங்களில் அநாதைகளாக விட்டு விடுவது சமுதாயத்தில் அதிகரித்தே காணப்படுகிறது. சொத்து பிரச்சனை.. குடும்ப பிரச்சனை.. ஏன் பெற்றோரின் முதுமையையே காரணமாக காட்டி அவர்கள் குடும்பங்களில் இருந்தே ஒதுக்கப்படுவதும், உறவுகள் இருந்தும் அநாதைகளாக... வீடு என்னும் சிறைகளில் துன்பத்தில் உழள வேண்டிய சூலுக்குக்கு தள்ளப்பட்டிருந்தனர் முதியவர்கள்...
அதிலும் கிராமங்களில் எந்தவொரு ஆதரவு இல்லாமல் உடல் நாணலாய் வளைந்துவிட்ட போதிலும் உழைத்தே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை ஏராளம்.. இந்தநிலையில் தான் சமூகநல திட்டங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, முதியோர் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, முதியோருக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தது. தங்களை தாங்களாகவே தற்காத்து கொள்ள முடியாத முதியோர்களுக்கு அவர்களின் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளும் வகையில் முதியோர் உதவித்தொகையாக ஆயிரம் ரூபாயை கடந்த 2011ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.
அதன்படி கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற வேளாண்மை தொழிலாளர்கள், 50 வயது எய்தியும் வாய்ப்பு வசதியின்றி திருமணமாகாத உழைக்கும் திறனற்ற ஏழைப்பெண்கள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு அளித்து, அவர்களும் தங்கள் வாழ்வில் வளம் காண வேண்டும், அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, அவர்களுக்கான உதவித்தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கி வந்தது.
இதனால் மிக நெருங்கிய உறவுகளாலும் பெற்ற பிள்ளைகளாலும் கைவிடப்பட்டு துன்பத்தில் உழன்றுக்கொண்டிருந்த முதியோர்களின் துயர் துடைக்கப்பட்டதுடன் அவர்களின் சுயமரியாதையும் பாதுகாப்பட்டது... நிதி சுதந்திரம் என்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள நிலையில் முதியோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி.. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு புதுவாழ்வு பெற்று தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத்தது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.
ஆனால் இன்றைய திமுகவோ... குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகையை தருவதாக கூறிக்கொண்டு முதியோருக்கான உதவித்தொகையை முடக்கிப்போட்டு அவர்களின் சாபத்துக்கு ஆளாகி நிற்கிறது... 2021 சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என பெண்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக... ஆனால் ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் தகுதி வாய்ந்தகுடும்ப தலைவிகளுக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தனது சுயரூபத்தை காட்டியது..
தமிழ்நாட்டின் குடும்ப தலைவிகளுக்கே நிபந்தனைகளை விதித்து தகுதியை எடைப்போட்டு தீர்மானித்த திமுகவின் போக்கு மக்களிடையே கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தது.. இதில் ஏராளமான ஏழை குடும்ப தலைவிகளின் மனுக்கள் தகுதியில்லை என கூறி நிராகரிக்கப்பட்டன... இப்படியிருக்கையில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற வரம்பும் நிர்ணயிக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் மீண்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.. மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் அல்லது முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டதால் மீண்டும் அவல கதிக்கு திரும்பியது முதியோர்களின் நிலை..
இதனால் குடும்ப தலைவி என்ற தகுதியையும் இழந்து... இதுநாள் வரைபெற்று வந்த முதியோர் உதவித்தொகையும் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து மீண்டும் துன்பத்தில் உழலும் நிலைக்கு ஆளாகினர்.. அதுமட்டுமின்றி முதியவர்களின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் மாதந்தோறும் 10ம் தேதிக்குள் உதவித்தொகையானது அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது... ஆனால் தற்போதை திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலானதில் இருந்தே...முதியோர் உதவித்தொகையை திமுக அரசு தாமதப்படுத்தி வருவதாகவும் மாதத்தின் இறுதி நாள் வரை உதவித்தொகைக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு முதியோர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மூன்று வேளை உணவுக்கே உதவித்தொகையை நம்பியுள்ள எத்தனையோ முதியோர்கள் பசியின் பிணியில் சிக்கி தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி உதவித்தொகைக்காக ஏங்கி தவிக்கும் முதியோர்கள் தள்ளாடும் வயதில் நிம்மதியிழந்து.. வங்கி சேவை மையங்களுக்கு பலமுறை அலைந்து திரிந்தே பணத்தை பெற வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். சமூகத்தின் நலன் சார்ந்து புரட்சித்தலைவி அம்மா எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்து அதனை சிறப்பாக செயல்படுத்திய நிலையில் மக்கள் மீது துளியும் அக்கறை அத்திட்டங்களையெல்லாம் திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வரும் மக்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது..