உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி : காரில் தொங்கியவாறு அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை பைபாஸ் சாலையில் விஜய் ரசிகர்கள் காரில் அட்ராசிட்டி செய்தவாறு பயணித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் 10 மற்றும் 12ன் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பாக எழுதிய மாணவர்களுக்கு விஜய் சார்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களை விஜய் ரசிகர்கள் வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் மாணவர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், பேருந்துக்கு அருகில் காரில் சென்ற விஜய் ரசிகர்கள், காரின் இருபுறங்களிலும் தொங்கியவாறு பயணித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

varient
Night
Day