தமிழகம்
நெல்லையில் பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் வயதான தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். செம்படாபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் - ராஜம்மாள் என்ற மூத்த தம்பதியர் இருவர் இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை பட்லூர் நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜம்மாள் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆறுமுகமும் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...