ஆம்ஸ்ட்ராங்கின் உருவ சிலை திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சி மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் நினைவிடத்தில் உருவச் சிலை திறக்கப்பட்டது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 5ந் தேதி அவரது வீட்டின் அருகே ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்துள்ளனர். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு உருவச் சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்தநிலையில், அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிலை அமைக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து, முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உருவச் சிலை திறக்கப்பட்டது. முன்னதாக ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாக சென்று ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Night
Day