ஆந்திராவில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் பயணி ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயில் ஆந்திராவின் எலமஞ்சிலி அருகே வந்தபோது பி1 ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு m1 ரயில் பெட்டிக்கு பரவியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்து கீழே இறங்கி உயிர்தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பயணி ஒருவர் உடல் கருகி பரிதபமாக உயிரிழந்தார். தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day