புரட்சித்தலைவரின் நினைவு தினம் - புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 38-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க புரட்சித் தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கழகத்தினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் கோ.ரஜினி மற்றும் டி.என்.தனபால் தலைமையில் நடைபெற்ற நினைவுதின நிகழ்ச்சியில், முன்னாள் தமிழக அரசு தலைமை கொறடாவும் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான பி.எம்.நரசிம்மன், புரட்சித்தலைவர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் 400 பேருக்கு வேட்டி சேலைகள் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அரசு தலைமை கொறடா பி.எம்.நரசிம்மன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேளஞ்சேரி செல்வம், எம்.எம்.கந்தசாமி, ராஜேந்திர ராஜு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் வழக்கறிஞர் வேலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவரின் திருவுருப்படத்திற்கு முன்னாள் அரசு தலைமை கொறடா பி.எம்.நரசிம்மன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் தனஞ்ஜெயன், பள்ளிப்பட்டு 15 ஆவது வார்டு உறுப்பினர் செல்வராணி வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Night
Day