ஆசையாய் சாக்லேட் கேக் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணி சரியாக வேகாமல் இருந்தது குறித்து வாடிக்கையாளர் போலீசில் புகாரளித்துள்ளார். 


திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் என்பவர், zomato ஆப் மூலம் காலடிப்பட்டியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் பிரியாணியும், சாக்லேட் கேக்கும் ஆர்டர் செய்துள்ளார். இவை டெலிவரி செய்யப்பட்ட நிலையில், பிரியாணியை பிரித்து உண்ட போது சரியாக வேகாமல் இருந்ததுடன், சாக்லேட் கேக் பூஞ்சை பிடித்து இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சிடையந்த சதீஷ், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று கேட்டபோது, ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்

Night
Day